குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் மாதந்தோறும் எந்த தேதியில் செலுத்தப்படும்.?
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, 13 பேருக்கு கூட்டுறவு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் முதலமைச்சர். தகுதியான பயனாளிகலில் சிலருக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாதந்தோறும் இந்த உரிமை தொகையானது 15ஆம் தேதி குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், 1ஆம் தேதி என்பது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு, மற்ற உதவி தொகை, பென்ஷன் போன்றவை பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடி பயனர்கள் இருப்பதால், 1ஆம் தேதி பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதில் தொழில் நுட்ப சிக்கல் எழும் என்பதால், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.