சென்னை கடலோர காவல் பாதுகாப்பு படையில் சேர வாய்ப்பு: ஊர்க்காவல்படையினர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு / Opportunity to join the Chennai Coast Guard: Applications are welcome for Home Guard service
சென்னை பெருநகர கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்க்காவல் படையினர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்க்காவல்படையினராக பணியில் சேர நீச்சல் திறன் கொண்ட இளம் துடிப்பான மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அதன் விவரம் வருமாறு:
* குற்றப் பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
* சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராகவும் மற்றும் மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு 20 கி.மீட்டர் சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
* மீனவ இளைஞர்களாக இருக்க வேண்டும் (மீனவர்கள் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும்).
* 1.8.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
* கடல் நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்.
* தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர் கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுவர்.
* இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30.9.2025 அன்று மாலை 5 மணிக்குள் ‘சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலையம் வளாகம், சைதாப்பேட்டை, சென்னை -15 எனற் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.