You are currently viewing தமிழகத்தில் நாளை (27-12-2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை (27-12-2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை (27-12-2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது  பராமரிப்பு பணிகளை  மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர்,  ஈரோடு, அரியலூர் மற்றும் திருப்பூர் ஆகிய  மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (27-12-2024) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

பெரம்பூர், படேல் சாலை, துளசிங்கம் தெரு, மீனாட்சி தெரு, பாரதி சாலை, ஆனந்தவேலு தெரு, பள்ளி சாலை, சுப்ரமணி சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு, ராஜபத்தர் தெரு, சிறுவள்ளூர் புரம், மாதவரம் நெடுஞ்சாலை, கொடுங்கையூர், ஆண்டாள் நகர், அன்னைதெராசா, இஸ்யாரியாநகர், அபிராமி அவென்யூ, மணலி சாலை, லட்சுமி அம்மன்நகர் 1 முதல் 3 வது தெருக்கள், தென்றல் நகர் 1 முதல் 8 தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3வது தெரு வரை.

ஈரோடு:

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம்.

கோயம்புத்தூர்:

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறையிலிருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

அரியலூர்:

கீழப்பலூர், பொய்யூர் வாட்டர் ஒர்க்ஸ், கொக்குடி தொழில்துறை.

திருப்பூர்:

பொங்கலூர், ஜி.என்.பாளையம், காட்டூர், வலையபாளையம், எல்லபாளையம்புதூர், கொழுமங்குளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Leave a Reply