Power Cut News: நாளை (13.04.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இந்த பணிகளின் போது மாதத்தில் ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் ஆனது தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை (13-04-2025) ஞாயிற்றுக்கிழமை மின் விநியோகம் தடை செய்யபடுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவு செய்யும் விதமாக தற்போது ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதில்லை. மேலும், “தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (15-04-2025) முடிவடைய உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது நாளை மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.