திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் / Private employment camp in Tiruvannamalai on August 29
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 , பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுனா்கள்
கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா்அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன்
வரவேண்டும்.
மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.
மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்