பாளை.யில் ஆக.23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் / Private employment camp on August 23rd in Palai
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆக.
23-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ளது.
5-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்தோ்வு செய்கின்றனா். சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்று, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாம் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வரலாம்.
மேலும், வேலைநாடுநா்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்தாகாது.
நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் என்ற டெலிகிராம் சானலில் இணைந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.