புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp in Pudukottai district
ஆகஸ்ட் 23 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்.படித்த படிப்பிற்கும், சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தாலும் பல லட்சம் பேர் தினமும் பல இடங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில் நிறுவனங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே தொழில் நிறுவனங்கள் என்று இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் நிறுவங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வெளியூர்களுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்பு குறைந்து சொந்த ஊரிலேயே வாய்ப்பானது உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,08,2025, சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, (தன்னாட்சி), (KKC), புதுக்கோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள் / பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்குதல்,
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி பொறியியல்
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தாங்கள் கலந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்