Puducherry: பொங்கல் பரிசாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்ப புதுச்சேரி அரசு முடிவு
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை அரசு 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பேரிடர் நிவாரணம் ரூ 6000 வழங்கப்பட்டதால் இந்த ஆண்டு ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. அதே போல, புதுச்சேரி அரசும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த, ஆண்டு பொங்கல் பொருள்கள் வழங்காமல் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ. 470 செலுத்தப்பட்டது போல, இந்த ஆண்டும் பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டும் 3,53,249 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.500 வழங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஏற்கனவே, 1,30,791 சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.