ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம் – உடனே விண்ணப்பிக்கவும்: தமிழ்நாடு அரசு / Rs. 1 lakh subsidy to buy an auto – apply now: Tamil Nadu government
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 1 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு மானியம் வழங்குகிறது.
இதனை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி ஆட்டோ வாங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பெண்கள் விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் இப்போது எந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மானிய விலையில் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம்? அவர்களுக்கான தகுதிகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசின் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணிநிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 ம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணிநிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. மேலும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1999 ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது- அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட 20 நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நலவாரியங்களில் பதிவு – அரசின் சலுகைகள்
அதன்டி 18 முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரண உதவி, விபத்து மரண உதவி மற்றும் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆட்டோ வாங்க தமிழ்நாடு அரசு மானியம்
மேலும், அண்மையில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் 15,06,2022 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயது பூர்த்தியடையாத பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மானியம் வாங்குவதவற்கு ஒரு லட்சம் மட்டும் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருவதற்கு https://www.tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயது பூர்த்தியடையாத பெண் ஓட்டுநர்கள் ஆட்டோ மானியம் வாங்குவதவற்கு https://www.tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு, தொழிலாளர் உதவி ஆணையர். (சமூக பாதுகாப்புத் திட்டம்), 275, பிரதான சாலை, தென்காசி – 627811 என்ற அலுவலக முகவரியிலும், 04633-214606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவசமாக தையல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக தையல் பயிற்சி பெற்று பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக இலவச தையல் பயிற்சி பெற திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.