100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் குளங்களை தூர்வாரும் பணி, கால்வாய்களை பராமரிப்பது, காடுகளை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு இந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 281 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 281ல் இருந்து ரூ. 294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.