கப்பல் தளத்தில் Driver வேலை
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Driver (Ambulance Van) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Driver (Ambulance Van) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1st year – ரூ. 27,000/-
2nd year- ரூ. 28,000/-
3rd year- ரூ. 28,900/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.12.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.