வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பயிற்சி – Tirupur
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 5 ஆவது தளம், அறை எண் 502 இல் உள்ள ஜவுளித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421–2220095 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.