SSC CHSL 2025 தேர்வு நவம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கும்
SSC CHSL 2025 தேர்வு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 12 முதல் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களே நகரம், தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிக்கான SSC CHSL 2025 முதல் கட்டத் தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்த நிலையில், நவம்பர் 12-ம் தேதி முதல் தேர்வு தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் நலன் கருதி தேர்வு நகரம், தேதி மற்றும் நேரத்தை தேர்வர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில், அக்டோபர் 22 முதல் 28 வரை அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் தேர்வு செய்யாதவர்கள் தேர்வை எழுத விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SSC CHSL 2025 Tier I தேர்வு
மத்திய அரசு லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுத 12-ம் வகுப்பு தகுதிப் பெற்றிருந்தால் போதுமானது. 2025-ம் ஆண்டில் மொத்தம் 3,131 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியாகி, தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்தது.இருப்பினும், இடையில் Phase 13 மற்றும் CGL தேர்வுகளில் ஏற்ப்பட்ட தொழில்நுப்டம் மற்றும் நிர்வாக கோளாறு, இத்தேர்வு அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கட்டமாக அத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், CHSL தேர்வு அக்டோபர் இறுதி நடைபெறும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு தேதி அறிவிப்பு
இந்நிலையில், தேர்வு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 12-ம் முதல் இத்தேர்வு தேசிய அளவில் நடைபெறவுள்ளது.
புதிய முறை அறிமுகம்
முந்தைய தேர்வுகளில் ஏற்பட்ட பிரச்னைகளில் காரணத்தினால், புதிய வழிமுறையை இத்தேர்வில் எஸ்எஸ்சி அறிமுகம் செய்துள்ளது. தேர்வு மையம் மிக தூரத்தில் ஒதுக்கப்படுவதாக தேர்வர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில், இத்தேர்வில் தேர்வர்கள் விரும்பும் தேர்வு நகரம், தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை முதன் முறையான எஸ்எஸ்சி வழங்குகிறது.
அதன்படி, இத்தேர்விற்கு விண்ணப்பித்து, தேர்வை எழுத தயாராக உள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்களின் லாங்-கின் மூலம் அக்டோபர் 22 முதல் 28 வரை உள்ள கால அவகாசத்தில், அவர்கள் விண்ணப்பிக்கும்போது தேர்வு செய்த 3 தேர்வு நகரங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதில் காலியாக உள்ள தேர்வு தேதி மற்றும் நேரம் காட்சிப்படுத்தப்படும். அதில் தேர்வர்கள் அவருக்கு விரும்பமான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வெழுத தேர்வு செய்தவர்களுக்கு குறைவான அளவிலேயே இடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தேர்வர்கள் விரும்பும் இடம் நிரப்பி விட்டால், தேர்வர்கள் அடுத்தப்படியாக இருக்கும் நகர விவரங்கள் காட்சிப்படுத்தப்படும். அதில் ஒன்றை தேர்வர்கள் தேர்வு செய்யலாம். முடிந்தவரை அந்த நகரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படும்.
தேர்வு எழுத முடியாது
தேர்வர்கள் மையத்தை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைய ஒதுக்கப்பட்ட பின்னர் அதனை மாற்ற இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், குறிப்பிட்ட கால அவகாசத்தில் தேர்வர்கள் அவர்களுக்கான மையத்தை தேர்வு செய்யவில்லை என்றால், அவர்கள் தேர்வை எழுத விரும்பவில்லை என எடுத்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நகரம், நேரம், தேதி ஆகியவற்றை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்த விளக்கமான புகைப்படங்களுடன் அடங்கிய படிவம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனை முதலில் படித்து அறிந்துகொண்டு, பின்னர் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அட்மிட் கார்டு எப்போது?
தேர்வர்கள் அவர்களுக்கான தேர்வு நகரங்களை தேர்வு செய்து இறுதி செய்த பின்னர், தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியிட உள்ளது. அக்டோபர் 28-ம் தேதிக்கு பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்மிட் கார்டு வெளியிடப்பட்டதும் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அட்மிட் கார்டில் தேர்வு மையம், அதனினி முகவரி மற்றும் இதர விவரங்கள் இடம்பெற்று இருக்கும். தற்போது முதல் கட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.