SSC புதிய அறிவிப்பு வெளியீடு
Staff Selection Commission எனப்படும் SSC ஆணையம் ஆனது Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2023 குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 1876 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Tier-1 தேர்வானது 03.10.2023ம் தேதி முதல் 05.10.2023ம் தேதி வரை நடத்தப்பட்டது. தற்போது SSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இத்தேர்வுக்கான Tentative Answer Key(s) along with Candidates’ Response Sheets(s) ஆனது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Tentative Answer Key பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.