SSC Phase-XIII/2025 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – Download Now
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தனது Phase-XIII/2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 22.07.2025 அன்று வெளியிட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தற்போது தங்கள் நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ SSC வலைத்தளமான https://ssc.gov.in/ இல் பதிவிறக்கம் செய்யலாம்.
முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
- அறிவிப்பு எண்: HQ-RHQS015/1/2025/C-4
- தேர்வு தேதி:
- 24, 25, 26, 28, 29, 30, 31 ஜூலை
- 1 ஆகஸ்ட் 2025
- மொத்த காலியிடங்கள்: 2423
- தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBE) + ஆவண சரிபார்ப்பு
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
ஹால் டிக்கெட் எப்படி பதிவிறக்கம் செய்வது?
- https://ssc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- “SSC Phase-XIII/2025 Admit Card” எனும் லிங்கை கிளிக் செய்யவும்.
- உங்களது பதிவு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.
- “Submit” பட்டனை கிளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பார்வையிடவும்.
- அதை PDF ஆக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.
- தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டை கொண்டு செல்ல தவறாதீர்கள்.
விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:
- நுழைவுச் சீட்டை தேர்வுக்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு பதிவிறக்கம் செய்து வைக்கவும்.
- தேர்வு மையம் மற்றும் நேரம் ஆகியவை ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும்.
- அனைத்து விவரங்களும் சரிபார்த்து கொண்டு தேர்வு மையத்திற்கு செல்லவும்