ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் BE முடித்தவர்களுக்கான வேலை
Deputy Vice President, Assistant Vice President பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை SBI வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA / ME / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Deputy Vice President, Assistant Vice President பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் 32, 36 வயது பூர்த்தியான 42,45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.44 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.