சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் / Students who wish to enroll in free vocational training at the Chennai Corporation Vocational Training Center for the academic year 2025-26 can apply by the 31st.
சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க மத்திய அரசின் NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற் பயிற்சி கீழ்காணும் ஆறு தொழில் பாடப்பிரிவுகளில் அளிக்கப்படுகின்றது.
சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000/- முதல் ரூ.10,500/- வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி (Internship Training) தொழிற்சாலைகள் மூலம் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களான இரண்டு செட் சீருடை, பஸ் பாஸ், பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கெட், மதிய உணவு மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.750/- பயிற்சி உதவித் தொகை, தகுதியுடைய மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின்படி மாதம் ரூ.1000/- வழங்கப்படும்.
தற்போது வரை சேர்க்கை செய்யப்பட்ட மற்றும் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
2025-26ஆம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை வழங்கப்படுகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தினை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையினை பெறலாம். சேர்க்கைக்கான கடைசி நாள் 31.08.2025 ஆகும்.
முகவரி:-
சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம்,
லாயிட்ஸ் காலனி, ஐஸ்ஹவுஸ், இராயப்பேட்டை, சென்னை-14.
தொலைபேசி எண் : 70104 57571, 79049 35430
பேருந்து நிறுத்தம்: ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அல்லது எல்லோ பேஜஸ்.
மேலும், மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது அசல் சான்றிதழ்களான பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். நேரடி சேர்க்கையின் போது அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.