கம்ப்யூட்டர் சயின்ஸ், IT பட்டதாரிகளுக்கு தமிழக அரசு இலவச டெவலப்பர் பயிற்சி + வேலைவாய்ப்பு / Tamil Nadu Government Free Developer Training + Employment for Computer Science, IT Graduates
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு ServiceNow Developer மற்றும் Salesforce Developer இலவச சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு TCS, Wipro, Cognizant போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
📌 பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
- இலவச சான்றிதழ் படிப்புகள்:
- ServiceNow Developer
- Salesforce Developer
- மொத்த நேரம்: 360 மணி நேரம்
- 180 மணி நேரம் நேரடி வகுப்பு
- 180 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு
- பிராயோகிக களப்பயிற்சி (Project-based training)
- இடம்: கோயம்புத்தூர், KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
- அரசு உதவித்தொகை, தங்குமிடம் வசதி
👩🎓 யார் விண்ணப்பிக்கலாம்?
- BE/B.Tech – CSE, IT அல்லது இணையான துறைகளில் பட்டம் பெற்றவர்கள்.
- சமீபத்தில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
📝 விண்ணப்பிக்கும் முறை
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
👉 ServiceNow Developer Course: விண்ணப்பிக்க இங்கே
👉 Salesforce Developer Course: விண்ணப்பிக்க இங்கே
Apply Now என கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
💼 வேலைவாய்ப்பு வாய்ப்பு
பயிற்சி முடித்தவர்களுக்கு பிளேஸ்மெண்ட் வாயிலாக கீழ்க்கண்ட முன்னணி IT நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்:
- TCS
- Wipro
- Cognizant