தமிழக அரசின் சார்பில் புதிய Whatsapp சேனல் அறிமுகம்
அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக புதிய Whatsapp சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே குறைவாக உள்ளது. எனவே வளர்ந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த ஒவ்வொரு துறையும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக கணக்குகள் வைத்து, அதன்மூலம் துறை சார்ந்த அறிவிப்புகள், திட்டங்களை வெளியிட்டு வருகின்றன.
அதனை தொடர்ந்து அதிக பயனர்கள் உள்ள ‘Whatsapp’ வழியாகவும் அரசின் திட்டங்களை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள ‘TNDIPR, Govt. of Tamilnadu’ என்ற பெயரில் புதிய Whatsapp சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் கணக்கின் சேனல் பகுதியில் இதை பாலோ செய்துகொள்வதன் மூலம் திட்டங்களை குறித்து அறிந்துகொள்ள முடியும்.