Mon. Aug 11th, 2025

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் தமிழக அரசு / Tamil Nadu government to provide free sewing machines to women

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் தமிழக அரசு / Tamil Nadu government to provide free sewing machines to women

தமிழ்நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. அதில் ஒன்று பெண்களுக்கு இலவசமாக தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்துறையின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், வயதான பெண்களும் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் மகளிர்குழுவில் இருக்கும் பெண்களுக்கு தலா 1,00,000 வரை குறைந்த வட்டியில் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசு நிதி உதவி தனிநபர் கடன் எனும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இலவச மின் மோட்டார் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இத்திட்டத்திற்கு 20 வயது முதல் 40 வயது வரை இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் ஆகியோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தையல் கலைகள் அறிந்திருக்க வேண்டும். முன்பே இலவச தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.

இலவச தையல் இயந்திரத்தை விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்தையோ அல்லது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், வயது சான்றிதழ், விண்ணப்பத்தாரின் புகைப்படம், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *