கூட்டுறவு வங்கி தேர்வில் வெற்றிபெற தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி / Tamil Nadu Government’s free training to succeed in Cooperative Bank Exam
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்பொழுது தமிழ்நாடு அரசின் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் 2513 பணிக் காலியிட அறிவிப்பு 06.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி (Diplamo in Co-operative Management) முடித்திருக்க வேண்டும். அல்லது பி.ஏ (கூட்டுறவு). பி.காம் (கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக்கோருபவர்கள், கணக்குப் பதிவியல் (Book Keeping), வங்கியியல் (Banking), கூட்டுறவு (Co-opearation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.
இத்தேர்விற்கு https://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.08.2025 முதல் 29.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 20.08.2025 முதல் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள் (Spot test), வாராந்திரத் தேர்வுகள், இணையவழித் தேர்வுகள் (online test), முழுமாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட TNPSC-Gr-1, TNPSC-Gr-2, Gr-4, TNUSRB, TRB ஆகிய பயிற்சி வகுப்புகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். .இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324-223555 அல்லது 6383050010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணி:
மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – 2513
கல்வித் தகுதி
– ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்புடன், கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி (Diploma in Cooperative Management) முடித்திருக்க வேண்டும்.
– பி.ஏ (கூட்டுறவு) அல்லது பி.காம் (கூட்டுறவு) படித்தவர்கள், கூட்டுறவுப் பயிற்சி சான்றிதழிலிருந்து விலக்கு பெறுவதற்கு, அவர்களின் பட்டப்படிப்பில் கணக்குப் பதிவியல் (Book Keeping), வங்கியியல் (Banking), கூட்டுறவு (Co-operation), மற்றும் தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
* தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://rcs.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பங்கள் 06.08.2025 முதல் 29.08.2025 வரை மட்டுமே பெறப்படும்.