Sat. Aug 30th, 2025

தமிழக மாணவர்களே. மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் / Tamil Nadu students can apply for an incentive of Rs. 25,000 per month.

தமிழக மாணவர்களே. மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் / Tamil Nadu students can apply for an incentive of Rs. 25,000 per month.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக ‘முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்குவிக்கும் திட்டம்’ உள்ளது இது யாருக்கெல்லாம் தெரியும்.

இத்திட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கடந்த ஆகஸ்ட் 8, 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் பொருளாதார சூழ்நிலை மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்காகவே திட்டத்தை அறிவித்துள்ளனர். மாணவர்களால் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் நம் மாநிலத்தில் மட்டும் அடங்கிவிடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் (Ph.D) படிப்பிற்காக மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.

கலை, சமூக அறிவியல், வேளாண்மை, சட்டம், மானுடறிவியல், பொறியியல், கால்நடை அறிவியல் மற்றும் கடல் சார்ந்த பல்வேறு துறைகளுக்கு ஊக்கத்துவையாக அரசு பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். மாதாந்திர ஊக்கத்தொகையுடன் அறிவியல் கருவிகள் மற்றும் இதர செலவுகளுக்காக கூடுதல் தொகையும் வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு 180 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளனர்.

திட்டத்திற்கு வேண்டிய தகுதிகள்: தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மாணவராக இருக்க வேண்டும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல், மருத்துவம், பட்டம், வேளாண்மை இது போன்ற படிப்புகளில் இலங்கை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம், பணி அனுபவம் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை, விண்ணப்பதாரருக்கு மொழியில் நடைமுறை அறிவு இருக்க வேண்டும், 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர்-வயது 35க்கு இருக்க வேண்டும், பட்டியலினத்தர், பழங்குடியினர்-வயது 35க்கு மேல் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை/பான் கார்டு, பட்டச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

இத்திட்டத்திற்கு மூன்று நிலைத்தேர்வுகள் உள்ளன:

1. பொது அறிவு, திறனாய்வு மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு தேர்வுகள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப்படும்.

2. தமிழக அரசு திட்டங்கள், கொள்கைகள், மற்றும் தமிழ் மரபு, கலாச்சாரம் சார்ந்த பகுப்பாய்வு கேள்விகள் இந்த எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

3. தமிழ் மொழி அறிவு, அறிவு சார்பு பண்புகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை சோதிக்கப்படும் இத்தேர்வு நேர்காணல் தேர்வாகும்.

பின்பு இறுதியாக மூன்று நிலை தேர்விலும் எடுத்த மதிப்பெண்ணை வைத்து இறுதியாக ஊக்கத்தொகைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: https://trb.tn.gov.in அல்லது https://bim.edu/index/tncmfp என்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *