Mon. Jan 12th, 2026

Tamilnadu: வேலையில்லாம இருக்கீங்களா..? உங்களுக்கு மாதம் மாதம் உதவித்தொகை வழங்க அரசு முடிவு

Tamilnadu: வேலையில்லாம இருக்கீங்களா..? உங்களுக்கு மாதம் மாதம் உதவித்தொகை வழங்க அரசு முடிவு

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்களின் மூலம் பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் விதமாக மாதாந்திர உதவித் தொகை என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 12ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வருடத்திற்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் மனுதாரர் EMPLOYMENT OFFICE-ல் விண்ணப்பித்து 40 வயதிற்குட்பட்ட நபராக இருக்க வேண்டும் .

தனியார் நிறுவனங்களில் பணிபுரியாத நபராகவும், சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாத நபராகவும் இருக்க வேண்டும். அவரின் குடும்ப வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *