Tamilnadu: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரமா ? – அரசின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில், பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை. அனைவரும் வடசொற்கள் கலந்த பெயர்களையே அவர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர். இதைக் கருத்தில் கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால், இதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 5,600 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் மட்டுமே எடுத்த கணக்கீடு ஆகும். இந்த திட்டத்தை சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.