Tamilnadu: “தமிழ்ப்புதல்வன்” திட்டம் விண்ணப்பிக்கும் முறை அறிவிப்பு…!!! “இனி உங்களுக்கும் உதவித்தொகை”…!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால், சமீப காலமாக “புதுமைப்பெண்’ என்ற திட்டம் உயர்கல்விப் படிக்கும் மாணவிகளுக்காக தொடங்கி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி, அவர்களின் பொருளாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, “தமிழ்ப்புதல்வன்” என்ற திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது, உயர்கல்வி படிக்கும் மாணவர்களும் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திட்டத்திற்கு தகுதி உடையவர்கள்;
இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி , அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி மட்டும் படித்த மாணவர்கள், தங்கள் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி பட்டயப்படிப்பு பெறும் காலம் வரை இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்பதை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்…
மாணவர்கள் இத்திட்டத்தை பெற வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கான ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். மேலும், ஆதார் கார்டு இல்லாத மாணவர்கள் அதனை விண்ணப்பித்திருக்க வேண்டும் அல்லது அதற்க்கென்று குறிப்பிட்ட மையத்திற்கு சென்று பதிவிட வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தில் உதவித்தொகை பெறும் மாணவர்கள் ஆதார் எண் இல்லையென்றால் அதிகாரப்பூர்வமான ஏதேனும் ஒரு அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லயென்றால், ஆதார் எண்ணிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள அடையாள சீட்டு அல்லது மனுவின் நகல் வங்கி, தபால் கணக்கு அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு, மஹாத்மா காந்தி தேசிய வேலை உதவி பெறும் அட்டை, ஓட்டுநர் உரிமம், கிசான் கணக்கு புத்தகம், தாசில்தார் அல்லது கெசடட் அதிகாரி அளித்துள்ள சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை இவ்வுதவிப் பெறவிருக்கும் மாணவர்கள் அளிக்கவேண்டும்.