You are currently viewing திருக்குறள் விழா – 2023 கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி

திருக்குறள் விழா – 2023 கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி

திருக்குறள் விழா – 2023 கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி

போட்டி நடத்தப்படும் முறை: இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகள் நடைபெறும் மாதங்கள்: அக்டோபர் – நவம்பர் 2023

போட்டி நடைபெறும் இடங்கள்: சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:

சென்னை, வேலூர் – 30 செப்டம்பர், 2023

தாம்பரம், புதுச்சேரி – 07 அக்டோபர், 2023

மற்ற மையங்கள் – 14 அக்டோபர், 2023

ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

FULL DETAILS:

திருக்குறள் பற்றி சில:

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.

வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.

சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.

இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.

இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.

அறத்துப்பால்-38 அதிகாரங்கள்

பொருட்பால்-70 அதிகாரங்கள்

காமத்துப்பால்-25 அதிகாரங்கள்

திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளதால், காலத்துக்கும் ஆசிரியரின் அறிவுக்கும் தகுந்தார் போல் இயலை மாற்றி அமைத்துள்ளனர்.

அறத்துப்பால்

பாயிரவியல்

இல்லறவியல்

துறவறவியல்

ஊழியல்

பொருட்பால்

அரசியல்

அமைச்சியல்

அரணியல்

கூழியல்

படையில்

நட்பியல்

குடியியல்

காமத்துப்பால்

களவியல்

கற்பியல்

திருவள்ளுவர் மூன்று காலம் உணர்ந்த ஞானி. அவரால் எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஆதலால் மூன்று காலம் உணர்ந்த வல்லுநர்கலால் மட்டுமே திருக்குறளை உணர்ந்த கொள்ள முடியும்.சாதாரன மனிதனுக்கு ஒரு பொருளும் தவத்தில் உயர்ந்த உள்ளத்துக்கு வேறு ஒரு பொருளும் தெரியும்.சிவலிங்கத்தை குழந்தைகளுக்கு(சாதாரன மனிதர்) சொல்லி தந்த விதத்திலும் , மாற்றுப்பால் மீது பற்று கொண்டவர்களால் வேறு ஒரு பொருள் அதாவது ஆண் பெண் உறுப்பு என்றும் , கடவுளை கண்ட உயர்ந்த ஞானிக்கு உயிர் வடிவமாகிய கோளத்தின்(முட்டை) வடிவமாக தோன்றும் என்று பெரியோர்களின் கூற்று.

காமம் என்றால் ஆண் மீது பெண்னுக்கும், பெண் மீது ஆணுக்கும் உள்ள காதல் தான் என்று தோன்றும். ஆனால் பெரியோர்கள் அதாவது தவத்தில் உயர்ந்த நிலை நோக்கிப்பயணம் செய்கிறவர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள காதல் என்றும் சொல்லப்படுகிறது.

மிருகமாக பிறந்து மனிதனாக மாறுவோம், பின்பு கடவுளாக மாறுவோம். இதில் மிருகமாக அப்படியே இருந்துவிடுவோம். மனித தன்மையிலிருந்து மிருகத்தன்மையும் பின்பு தெய்வத்தன்மையும் வரலாம்.எப்படி வேண்டுமானலும் நடக்கலாம்.மிருகத்தன்மையிலிருந்து மனித தன்மைக்கும், மனித தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கும் மாறுவதற்க்கு வழி இத்திருக்குறளில் இருப்பதாக பெரியோர்களின் கூற்று.

அதிகாரம் ஒவ்வொன்றும் அனுபவத்தின் சொத்து. கடவுளை நோக்கி பயணம் செய்தால் குறளில் உள்ள பொருளின் சூட்சமம் புரியும்.தமிழின் அறிவு, இயற்கை அறிவு மற்றும் தவத்தினால் வரும் அநுபவம் சேரும் பொழுது திருக்குறள் தன் சூச்சமத்தை வெளிப்படுத்திவிடும்

திருக்குறளுக்கு உள்ள வேறு பெயர்கள்

உத்தரவேதம்

பொய்யாமொழி

வாயுரை வாழ்த்து

தெய்வநூல்

பொதுமறை

முப்பால்

தமிழ்மறை

ஈரடி நூல்

வான்மறை

உலகப்பொதுமறை

வள்ளுவரின் பல பெயர்கள்

தெய்வப் புலவர்

செந்நாப் புலவர்

தெய்வத் திருவள்ளுவர்

செந்நாப் போதார்

தெய்வத் திருவள்ளுவர்

தெய்வப் புலமைத் திருவள்ளுவர்

தேவர்

திருவள்ளுவர்

பொய்யில் புலவர்

வள்ளுவ தேவன்

வள்ளுவர்

நாயனார்

முதற்பாவலர்

பெருநாவலர்

பொய்யா மொழியார்

திருக்குறள் பற்றிய கூடுதல் தகவல்கள்

தமிழ், கடவுள் என்னும் சொற்கள் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.

1812 ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டது.

வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு முதல் பெயர் முப்பால் என்பர்.

அறத்துப்பாலில் 380 குறட்பாக்கள்

பொருட்பாலில் 700 குறட்பாக்கள்

இன்பத்துப்பாலில் 250 குறட்பாக்கள்

குறட்பா அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஏழு சீர்களைக் கொண்டது.

திருக்குறளில் மொத்த சொற்கள் 14,000 உள்ளன.

திருக்குறளில் 42,194 எழுத்துகள் உள்ளன.

தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துகள் மட்டும் திருக்குறளில் இடம்பெறவில்லை.

திருவள்ளுவர் பதிவு செய்துள்ள இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே பழம் – நெருஞ்சிப் பழம்.

திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே விதை – குன்றிமணி.

வள்ளுவர் காலம் – கி.மு 31

வள்ளுவர் பயன்படுத்தாத எண்ணுப் பெயர்  – ஒன்பது (9)

திருக்குறளை உரை இல்லாமல் அச்சுப் பணி செய்தவர் – ஞானப்பிரகாசர்

இலத்தீனில் குறளை மொழிபெயர்த்த வெளிநாட்டவர் – வீரமாமுனிவர்

திருக்குறளின் சிறப்புக்கும் பெருமைக்கும் துணையாக விளங்குகிறது திருவள்ளுவமாலை

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பதிவு செய்தவர் பாரதிதாசன்

திருவள்ளுவர் இருமுறை பதிவு செய்துள்ள ஓரே அதிகாரம் – குறிப்பறிதல்

எல்லீஸ் என்பவர் திருவள்ளுவர் படம் பொதிந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் நான்கு.

திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

ஒரே திருக்குறளில் ஆறு முறை வந்துள்ள சொல் – பற்று

திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன.

திருக்குறளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து – னி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத உயிர் எழுத்து – ஔ

திருக்குறளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை என்கின்றனர்.

பரிமேலழகர் – திருக்குறள் உரையாசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர்

திருக்குறளில் இரண்டு மரங்கள் இடம்பெற்றுள்ளன – பனை, மூங்கில்

ஒரு திருக்குறளில் 7 சீர்கள் உள்ளது.

திருக்குறளின் இயல்களின் எண்ணிக்கை – ஒன்பது (9)

திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

Leave a Reply