You are currently viewing TNPSC குரூப் 4 – தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

TNPSC குரூப் 4 – தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

நாளை குரூப் 4 – தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

நாளை 09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்….

  1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : 8:00 -8.30 மணி
  2. சலுகை நேரம் : 9.00 மணி
  3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : 9.00 மணி

4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : 9:15 மணி

5.தேர்வு தொடங்கும் நேரம் : 9:30 மணி

6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.

7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல்
எழுதவும்.

8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்…

9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்…

11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.

தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்…

👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)

👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4

👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்..

தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்…..

👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்

👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது

👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)

👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.

👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.

👉6.நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்

👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்…

👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.

👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்…

👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்

தேர்வுக்கு தயாராதல் குறித்து TNPSC அறிவித்துள்ள சில முக்கிய குறிப்புகள் மட்டும் உங்களுக்காக

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை.

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
–> ஆதார் அட்டை
–> பாஸ்போர்ட்
–> ஓட்டுநர் உரிமம்
–> பான் அட்டை
–> வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும் (தேர்வு தொடங்கும் முன் – 1, முடிந்த பின் – 1), ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression) (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)
(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)

5) உங்களுக்குக் கொடுக்கப்படும் வினாத்தாள் புத்தகத்தினைப் (Question Booklet) பிரிப்பதற்கு முன்பு அதில் அனைத்துப் பக்கங்களும் விடுபடாமல் உள்ளதா? என்பதனை உறுதி செய்த பின்னர் வினாத்தாள் புத்தகத்தின் எண்ணை OMR-ல் நிரப்பவும்.

பின்னர், Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும்.

6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும்.

7) A, B, C, D, E – ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 – 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.

8) Shade செய்ய கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

10) நுழைவுச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடம் பெற்றுள்ள இடத்தில் கையொப்பம் பெற்று நுழைவுச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

All the best to all friends

💐💐💐💐💐💐💐💐

Leave a Reply