TNPSC குரூப் 1 பிரிலிம்ஸ் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு 2024
TNPSC Group I Examination: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு (13.07.2024) நடைபெற உள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உடனடியாக தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேர்வு நாள்: 13.07.2024 ( சனிக்கிழமை) முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- அனுமதி சீட்டு அஞ்சல்மூலம் அனுப்பப்படமாட்டாது.
- விண்ணப்பத்தாரர்கள் https://www.tnpsc.gov.in/english/viewhallticket.aspx என்கிற இணையதள முகவரி மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் ‘நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்’ (Hall Ticket Download) என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- ‘நிரந்தரபதிவு விவரங்கள்’ One time Registration and Dashboard என்ற இணைப்பின் மூலம் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை சமர்ப்பித்து உள்நுழையுங்கள்.
- விண்ணப்பிப்பதாரரின் விவரங்கள் காட்டப்படும். அதில், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்’ (Hall Ticket Download) என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். அதற்கு முன்னதாக, ‘Current Application’-ல் உள்நுழைந்தது உங்கள் விண்ணப்ப பதிவு எண்ணை தெரிந்து கொள்ளுங்கள்.
- Download HallTicket: நீங்கள் விண்ணப்பித்த தேர்வுகளின் பட்டியல் விவிரங்கள் இருக்கும். Combined Civil Services Examination – I வரிசையில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- விண்ணப்ப பதவி எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்ப பதிவு எண் குறுஞ்செய்தி(SMS)/மின்அஞ்சல் முகவரி (e.mail) மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கும்.
- அனுமதி சீட்டில் ஏதேனும் பிழையோ, திருத்தமோ செய்ய வேண்டுமெனில், அனுமதிச் சீட்டினை பெற்றவுடன் விண்ணப்பதாரர், தேர்வாணைய அலுவலகத்திற்கு திருத்தத்திற்காக உடனடியாக மின்னஞ்சல்/கைப்பேசி மூலம் தெரிவிக்க வேண்டும்.
- அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படும். அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- தேர்வுக்கு இன்னும் 48 மணி நேரங்களுக்கும் குறைவான நேரம் இருப்பதால், விண்ணப்பதாரர்கள் நேரம் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.