TNPSC Group 2, 2A இலவச பயிற்சி வகுப்புகள் – ஆகஸ்ட் 4 முதல் துவக்கம் / TNPSC Group 2, 2A Free Coaching Classes – Starting from August 4th
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC தொகுதி 2 & 2A (Group 2 & 2A) பதவிகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4, 2025 (திங்கட்கிழமை) முதல் துவங்கப்படுகிறது.
முக்கிய தகவல்கள்:
- பயிற்சி வகுப்பு துவக்கம்: ஆகஸ்ட் 4, 2025 (திங்கள்)
- நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
- இடம்: செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், செங்கல்பட்டு
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: வகுப்புகள் துவங்கும் நாளை முன்னிட்டு உடனடியாக விண்ணப்பிக்கவும்.
தேர்வு விபரங்கள்:
- மொத்த காலிப்பணியிடங்கள்: 645
- Group 2 (II) காலிப்பணியிடங்கள்: 50
- Group 2A (IIA) காலிப்பணியிடங்கள்: 595
- TNPSC அறிவிப்பு வெளியீடு: 15.07.2025
பதிவிற்கான ஆவணங்கள்:
- புகைப்படம்
- ஆதார் அட்டை நகல்
தொடர்பு எண்கள்:
- 044-27426020
- 9486870577
- 9384499848
விருப்பமுள்ள தேர்வாளர்கள் நேரில் வந்து பதிவுசெய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.