Sun. Jul 27th, 2025

TNPSC குரூப் 2 தேர்வு – முதன்மை தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள் வெளியீடு

TNPSC குரூப் 2 தேர்வு – முதன்மை தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் 2A விற்கான முதன்மை தேர்வுகள்  வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, இந்த முதன்மை தேர்வுக்கு பின்பற்றக்கூடிய வழிமுறைகளை TNPSC தனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது, வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கும், பிற்பகல் 01.30 மணிக்கும்  என இரண்டு அமர்வில் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும்,  அன்று காலை தேர்விற்கு 09.00 மணி மற்றும் பிற்பகல் தேர்விற்கு 02.00 மணி என சலுகை நேரத்தையும் தெரிவித்துள்ளது. அதேபோல், அன்று காலை 09.30 மணி மற்றும் பிற்பகல் 02.30 மணி என இரண்டு அமர்வுகளுக்கான தேர்வு தொடங்கும் நேரத்தையும் அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிடப்பட்ட சலுகை நேரத்திற்கு பிறகு வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *