Fri. Oct 31st, 2025

TNPSC குரூப் 4 : தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு; நவம்பர் 7-க்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்

TNPSC குரூப் 4 : தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு; நவம்பர் 7-க்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்
TNPSC குரூப் 4 : தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு; நவம்பர் 7-க்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்

TNPSC குரூப் 4 : தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு; நவம்பர் 7-க்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியான நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்கள் வரும் நவம்பர் 7-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் கட்டமாக சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்னோ டைப்பிஸ்ட் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
2025-ம் ஆண்டுக்கான டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி வெளியானது. இதற்கான முடிவுகள் 3 மாதங்களில் சரியாக அக்டோபர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 32 பதவிகளில் 4,662 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வை மொத்தம் 11.46 லட்சத்திற்கு அதிகமானவர்கள் எழுதி இருந்தனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு தேர்வு கடினமாக இருந்ததால் தேர்வர்கள் முடிவுகளை ஆர்வத்துடன் அறிந்துகொண்டனர். ஆனால், குரூப் 4 தேர்வை பொறுத்தவரை, கட்-ஆஃப் அடிப்படையில் வெளியாகும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையிலேயே யாருக்கெல்லாம் அரசு பணி கிடைக்க உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், பட்டியல் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர்.

முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியல்
ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்குட்பட்டு கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் 44 பக்க பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்வர்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவியை தவிர இதர பதவிகளுக்கு தகுதிப் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

நவம்பர் 7 வரை அவகாசம்
அனுமதிக்கப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை 29,10,2025 முதல் 07.11. 2025 வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யும் தேர்வர்கள் அடுத்த கட்டத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழை பதிவேற்றம் செய்வது எப்படி?
தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : OTR பதிவு மற்றும் Dashboard கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் தேர்வர்கள் அவர்களின் லாங்-கின் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
படி 4 : அதில் Current Application எனப்தை கிளிக் செய்யவும். தொடர்ந்து, Upload Documents என்ற இருப்பதில் குரூப் 4 தேர்விற்கான தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
படி 5 : இறுதியாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான Acknowledgement பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு குரூப் 4 தேர்வர்கள் 1800 419 0958 என்ற கட்டணமில்லா டிஎன்பிஎஸ்சி உதவு மையத்தை அல்லது grievance.tnpsc.gov.in என்ற இமெயில் முகவரிக்கு தொடர்புகொண்டு அணுகலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *