Thu. Feb 12th, 2026

தமிழ்நாடு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு.. TNUSRB பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு.. TNUSRB பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு.. TNUSRB பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் எஸ்.ஐ தேர்வில் சில வினாக்களுக்கு உரிய விடைகள் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது என்றும், இதற்கான உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,352 காவல் உதவியாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.

மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு இந்த நிலையில் கடந்த ஆம் தேதி எஸ்.ஐ எழுத்துத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் தேர்வு முடிவானது நிறுத்தி வைக்கப்பட்டது. எழுத்து தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து இருந்த தேர்வர்களுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. இந்த நிலையில் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிலர் மனு தாக்கல் செய்துள்ளார்.

1,352 பணியிடங்கள் மதுரை சுந்தரராஜன்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக், ராமநாதபுரத்தை சேர்ந்த சசிகலா, ராமு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி, தூத்துக்குடியை சேர்ந்த ஜான் கோவில் பிள்ளை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிபாண்டி ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-

நாங்கள் சிறு வயதில் இருந்தே காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது லட்சியமாக இருந்து வருகிறது. இளங்கலை பட்டப்படிப்பினை முடித்த நாங்கள் ஏறகனவே போலீசாக பணியாற்றி வருகிறோம். இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1,352 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. தேர்வு முடிவில் குளறுபடி எழுத்து தேர்வு முடிந்த நிலையில் அதில் நான்கு வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. எங்கள் அனைவருக்கும் வெவ்வேறு வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. எழுத்து தேர்வுக்கான தோராயமான விடை வெளியிடப்பட்டதில் சரியான விடையாக கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்னர் தவறானவை என தெரிவிக்கப்பட்டு இறுதி விடை 2 நாட்கள் கழித்து வெளியானது. இதில் பல்வேறு வினாக்களுக்கு உரிய விடைகள் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே 28.1.2026 அன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதியவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. விண்ணப்ப எண்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. இதற்கு பிறகு தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடியால் இணையதளத்தில் இருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டன. பதில் அளிக்க உத்தரவு எனவே தேர்வில் தவறாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கினால் நாங்கள் அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெறுவோம். எஸ்.ஐ பணிக்கும் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த தேர்வில் எங்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இது குறித்து பதில் அளிக்கும்படி சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணையை மார்ச் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *