ரயில்வேயில் Trade Apprentice வேலைவாய்ப்பு – 1007 காலிப்பணியிடங்கள்
Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1007 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
SECR காலிப்பணியிடங்கள்:
Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trade Apprentice கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
SECR வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Trade Apprentice ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும்.
SECR தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Medical Fitness / Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.