You are currently viewing 10 ஆம் வகுப்பிற்கு இரண்டு முறை பொது தேர்வுகள் – மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய கல்வி கொள்கை

10 ஆம் வகுப்பிற்கு இரண்டு முறை பொது தேர்வுகள் – மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய கல்வி கொள்கை

10 ஆம் வகுப்பிற்கு இரண்டு முறை பொது தேர்வுகள் – மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய கல்வி கொள்கை

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் சமீபத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க உயர்நிலைக்குழு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் “2026 – 2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டு பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்டுவரும் செயல்முறைகளில் ஈடுபடுமாறு” சி.பி.எஸ்.சி க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், “வரும் கல்வியாண்டில் முதற்கட்டமாக சி.பி.எஸ்.சி 10 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்துமாறும்” அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டில் சி.பி.எஸ்.சி 10 வகுப்பிற்கான முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த “புதிய கல்வி கொள்கை குறித்து   பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் வருகிற மார்ச் 9 ஆம் தேதி வரை சி.பி.எஸ்.சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது கருத்துக்களை  தெரிவிக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply