யுனைடெட் கமெர்ஷியல் வங்கி (UCO Bank) 2025 ஆம் ஆண்டிற்கான 532 “Apprentices” பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Graduate) தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் விண்ணப்பம் 21 அக்டோபர் 2025 முதல் 30 அக்டோபர் 2025 வரை நடைபெறும். இந்த அறிவிப்பின் மூலம் வங்கி துறையில் பணியாற்ற ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்வின் மூலம் தகுதியானவர்கள் ஒரு வருட பயிற்சி (Apprenticeship) அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
காலியிட விவரங்கள்
மொத்த காலியிடம்: 532
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Graduate) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்
- அரசு விதிகளின் படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரம்
- தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு மாதம் ₹15,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பிரிவு | கட்டணம் |
---|---|
SC / ST | இலவசம் |
PwBD | ₹400 + GST |
GEN / OBC / EWS | ₹800 + GST |
தேர்வு முறை
- ஆன்லைன் தேர்வு (Objective Type Exam) – மொத்தம் 100 கேள்விகள், 100 மதிப்பெண்கள்
- தேர்வுக்காலம் – 60 நிமிடங்கள்
- தேர்வு முடிவுகள் அடிப்படையில் Merit List / Wait List வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம் uco.bank.in சென்று Recruitment Section-ஐ திறக்கவும்.
- “Apprentices Recruitment 2025” என்ற இணைப்பை தேர்வு செய்யவும்.
- முதலில் NATS Portal (https://nats.education.gov.in) இல் பதிவு செய்யவும்.
- Student Register/Login பகுதியில் உள்நுழைந்து UCO Bank Advertisement-ஐ தேர்வு செய்யவும்.
- Enrolment ID ஐ பதிவு செய்து வைத்துக்கொள்ளவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து Submit செய்யவும்.