UPSC CAPF AC 349 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசு பாதுகாப்பு படைகளில் அதிகாரி பதவியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு முக்கியமான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. Union Public Service Commission சார்பில் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் Assistant Commandant (Group A) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 349 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆட்சேர்ப்பு BSF, CRPF, CISF, ITBP மற்றும் SSB ஆகிய மத்திய பாதுகாப்பு படைகளுக்காக நடைபெறுகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 20 பிப்ரவரி 2026 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12 மார்ச் 2026 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 19 ஜூலை 2026 அன்று நடைபெறும்.
காலியிட விபரம்:
- BSF – 108
- CRPF – 106
- CISF – 70
- SSB – 53
- ITBP – 12
மொத்தம் – 349
தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் (01.08.2026 அடிப்படையில்). விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்; ஆனால் இறுதியில் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கும் மத்திய அரசு பணியாளர்களுக்கும் விதிப்படி தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
பொது / OBC / EWS ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200.
பெண்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டும் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு – 19 ஜூலை 2026
- Paper I: General Ability & Intelligence – 250 மதிப்பெண்கள் (Objective)
- Paper II: General Studies, Essay & Comprehension – 200 மதிப்பெண்கள் (Descriptive)
தவறான பதில்களுக்கு Negative Marking உள்ளது.
- Physical Standards Test (PST) / Physical Efficiency Test (PET)
- ஆண்கள்: 165 செ.மீ உயரம், 100 மீட்டர் ஓட்டம் 16 வினாடிகளில் உள்ளிட்ட உடற்தகுதி சோதனைகள்
- பெண்கள்: 157 செ.மீ உயரம், 100 மீட்டர் ஓட்டம் 18 வினாடிகளில் உள்ளிட்ட சோதனைகள்
- Interview / Personality Test – 150 மதிப்பெண்கள்
- Medical Test – கண் பார்வை, உடல் நலம் உள்ளிட்ட சோதனைகள்
இறுதி தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்.
சம்பளம்:
Assistant Commandant (Group A) அதிகாரிகளுக்கான ஊதியம் மத்திய அரசு விதிப்படி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் Merit Rank மற்றும் Force Preference அடிப்படையில் நியமிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு, கட்டணம் செலுத்துதல், தேர்வு மையம் தேர்வு செய்தல், Force Preference அளித்தல் ஆகிய அனைத்தும் ஆன்லைனில் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை இறுதி சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
UPSC Assistant Commandants Important Links
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
- எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பின் தகுதி பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். Admit Card இணையதளம் மூலம் மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்; தபால் மூலம் அனுப்பப்படாது.
மத்திய பாதுகாப்பு படைகளில் அதிகாரி பதவியில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது முக்கிய வாய்ப்பு. தகுதி உள்ளவர்கள் கடைசி தேதியை தவறவிடாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

