Tue. Oct 14th, 2025

UPSC / TNPSC: சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் – அனுமதி இலவசம் / UPSC / TNPSC: Free training camp in Chennai – Admission is free

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் & முருங்கை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி / Mushroom & Drumstick Product Preparation Training at Coimbatore Agricultural University

‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.
‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’
இந்த நிகழ்வில் முனைவர் வெ.திருப்புகழ் IAS (Retd.) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முன்னாள் ஆலோசகர், டாக்டர் K.விஜயகார்த்திகேயன் IAS, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *