villupuram மாவட்ட நீதிமன்றம் Para Legal Volunteers வேலைவாய்ப்பு 2025 | 24 பணியிடங்கள்
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் சார்பில் Para Legal Volunteers (சட்ட உதவி தன்னார்வலர்கள்) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 24 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு MSW (Master of Social Work) தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 06 நவம்பர் 2025க்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
| பதவி பெயர் | பணியிடங்கள் எண்ணிக்கை |
|---|---|
| Para Legal Volunteers | 24 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் MSW (Master of Social Work) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது வரம்பு
குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
நிலையான சம்பளம் இல்லை; பணிநாட்களுக்கு ஏற்ப மதிப்பூதியம் வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம் https://viluppuram.dcourts.gov.in சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்வி மற்றும் தகுதி சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்கவும்.
- கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாண்புமிகு தலைமை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்ட சேவை ஆணையம்,
மாவட்ட நீதிமன்ற வளாகம்,
விழுப்புரம் – 605 602.
விண்ணப்பங்கள் 06.11.2025 மாலை 5.00 மணிக்குள் பெறப்பட வேண்டும்.

