பழனியில் அர்ச்சகராக வேண்டுமா..? ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி / Want to become a priest in Palani? Free training with an incentive of Rs. 10,000
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், 2025-2026 கல்வியாண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதாகம மற்றும் தமிழ் இசைப் பயிற்சி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி நிலையங்கள், ஆன்மிகப் பணிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன.
அர்ச்சகர் பயிற்சி :
பயிற்சி காலம்: 1 வருடம்
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓதுவார் பயிற்சி :
பயிற்சி காலம்: முழுநேரப் பயிற்சிக்கு 3 ஆண்டுகள், பகுதிநேரப் பயிற்சிக்கு 4 ஆண்டுகள்
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேதாகமப் பாடசாலை :
பயிற்சி காலம்: 5 ஆண்டுகள்
கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் இசைப் பயிற்சி :
பயிற்சி காலம்: 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 13 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சலுகைகள் என்னென்ன..?
இந்தப் பயிற்சிகளில் சேரும் மாணவர்களுக்கு, திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம், உடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. முழுநேரப் பயிற்சிக்கு ரூ.10,000 மற்றும் பகுதிநேரப் பயிற்சிக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த ஆன்மிகப் பயிற்சிகளில் சேர ஆர்வமுள்ளவர்கள், திருக்கோவில் இணையதளமான palanimurugan.hrce.tn.gov.in-இல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன் திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தைப் பார்வையிடலாம்.