மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 10000 முதல் 15000 வரை நிதியுதவி / Women’s Self-Help Group provides financial assistance of 10,000 to 15,000 to women
Self-help group: மகளிர் சுய உதவிக் குழு: பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவி குழு மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அடக்கும் குறைந்த அளவில் வட்டி கடன், மேற்கொண்டு அரசானது சில சமயங்களில் அதனையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் சுய உதவி குழு ஆரம்பித்து ஆறு மாதங்களான குழுக்களும் பயன் பெறலாம்.
இதில், ட்ரோன் கேமரா பயன்படுத்தும் பயிற்சி, திறன் பயிற்சி உள்ளிட்டவைகள் கொடுக்க உள்ளனர். இதன் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழுக்களுக்கும் ட்ரோன் கேமராக்கள் வழங்கி 80 சதவீதம் மானியமும் மீதமுள்ள 20% குறைந்த அளவு வட்டியும் வழங்கப்பட உள்ளது. இதனை ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
அதேபோல, இந்த குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை சார்ந்த அரிசி நெல் தானியங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதின் நோக்கமாக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா வளாகத்தில் இது ரீதியான இயற்கை சந்தை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இவையனைத்தையும் மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.