தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை / work at the Arulmigu Dandumariamman Temple.
அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 02 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 24.12.2025 |
| கடைசி தேதி | 24.01.2026 |
1. பதவி: ஓதுவார்
சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாட பிரிவை முடித்ததற்கான தேவார பள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |

