Sat. Jul 12th, 2025

தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை / Work in the National Health Program

தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை / Work in the National Health Program

தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பணி: ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்

காலியிடம் : 1

சம்பளம் : மாதம் ரூ.23,000

தகுதி: பேச்சு மற்றும் மொழி நோயியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: சிகிச்சை உதவியாளர் (பெண்)

சம்பளம் : மாதம் ரூ.13,000

தகுதி: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.

பணி: இடைநிலை சுகாதாரப் பணியாளர்

காலியிடங்கள் : 23

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50-க்குள் இருக்கவேண்டும்.

பணி: பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள்: 12

சம்பளம் : மாதம் ரூ.14,000

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 40 – க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637 003. தொலைபேசி எண்: 04286281424.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 4.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *