தமிழக விலங்குகள் நல வாரியத்தில் 76 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் / You can apply for 76 vacancies in the Tamil Nadu Animal Welfare Board.
தமிழக விலங்குகள் நல வாரியத்தில் மாவட்ட விலங்குகள் நல அலுவலா்கள், கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்ட 76 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக விலங்குகள் நல வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக விலங்குகள் நல வாரியம் சாா்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பல்வேறு விலங்குகள் நலன் தொடா்பான பணிகளைச் செயல்படுத்த ஏதுவாக 38 மாவட்ட விலங்குகள் நல அலுவலா்கள் நியமிக்கப்படவுள்ளனா். அதேபோல், தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு துன்பம் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதை உறுதி செய்வது, 38 கால்நடை கிளை நிலையங்களுடன் இணைந்து நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் செல்லப்பிராணிகள் பராமரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 38 கால்நடை மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இந்தப் பணியிடங்களில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு ஓராண்டுக்கு, மாதம் ரூ.56,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள கால்நடை மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் tnawb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் எண்.13/1, 3-ஆவது கடல்நோக்கு சாலை, வால்மீகி நகா், திருவான்மியூா், சென்னை-41’ என்ற முகவரிக்கு வருகிற நவ.14-ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

