Fri. Aug 29th, 2025

இன்று முதல் Gate தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் / You can apply for the GATE exam from today

இன்று முதல் Gate தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் / You can apply for the GATE exam from today

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, வருடந்தோறும் ‘கேட்’ (GATE – Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இது கல்விக்கு மட்டுமல்லாமல், இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேர்வதற்கும் முக்கியமான தேர்வாகும். ‘கேட் 2026’ தேர்வு என்ஜினீயரிங், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடப் பிரிவுகளுக்காக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் ஒரு அல்லது இரண்டு தாள்களை தேர்வு செய்து எழுதலாம்.

இந்த தேர்வை எழுத, என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள், அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதி பெறுவர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஆகஸ்ட் 26, திங்கள்) முதல் துவங்கியுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25 ஆகும். தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *