Sun. Jul 27th, 2025

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை – Southern Railway

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை – Southern Railway

இந்தியாவில் பொதுவாக பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் தேவைகளுக்காக சிறப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், பீகார் செல்லும் பொது மக்களுக்கு ஏதுவாக டெல்லியில் இருந்து பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட முக்கிய நகருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்திலும் சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில் கூடுதலாக நான்கு சிறப்பு ரயில்களும், கோவைக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக, சென்னையிலிருந்து மட்டுமே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளும்படியும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *