CHENNAI: மாநகராட்சி பள்ளிகளில் 499 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இடமாற்றம் மூலம் நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது என கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக மாநகராட்சிக்கு எந்த விதிகளும் இல்ல, பள்ளி கல்வித்துறை விதிகளே பின்பற்றப்படுகிறது என விளக்கம் அளித்தது. இதனையடுத்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது சென்னை மாநகராட்சி பள்ளியில் காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50% பணியிடங்களை உடனடியாக நிரப்ப சென்னை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுத வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து ஆறு மாதங்களில் தேர்வுக்கான நடைமுறைகளை முடித்து இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி தேர்வாளர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதனை பொறுத்து மாநகராட்சி பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடமாற்றம் மூலம் நியமிக்கப்படும் 79 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும் பதவி உயர்வுக்கான 50% ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியலை தயாரித்து அடுத்த 3 மாதத்தில் வெளியிட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.