செப். 16 ஆம் தேதி ராமநாதபுரம் இன்ஃபண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் https://forms.gle/AWgamcJk31VKkidc6 என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அதே போல வேலை தேடும் இளைஞர்கள் https://forms.gle/AsHE1fpt82KnyPb88 என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த முகாம் செப்.16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் நேரில் தங்களுடைய சுய விவர ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.