வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 3 மணி நேரம் ஓய்வு – DELHI
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர தொடங்கியது. தற்போது கோடை மழை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் வட மாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
இதனால் வெயிலில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே தினசரி 12 -3 மணி வரை கட்டாயம் வழங்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறையும் வரை இந்த 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த ஓய்வு அவர்கள் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.