Sat. Aug 30th, 2025

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – செங்கல்பட்டு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – செங்கல்பட்டு

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (வேல்ஸ் பல்கலைக்கழக வளாகம் அருகில்) நடக்கிறது.

இதனை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 2.09.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் நேரில் வருகைபுரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *