TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வரும் டிசம்பரில் வெளியாகும் என அறிவிப்பு
அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பரில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. துணை வணிக வரி அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட 507 பணியிடங்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வுகளும், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட ஆயிரத்து 820 பணியிடங்களுக்கு குரூப் 2 ஏ தேர்வுகளும் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் குரூப் 2, மற்றும் 2 ஏ ஆகிய தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் உத்தேசமாக வரும் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், பிரதான தேர்வு வரும் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முதல்நிலைத் தேர்வின் விடைக்குறியீடுகளை அண்மையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
முன்னதாக குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.